17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரே நாளில் டிரென்டிங்…..நொடியில் பரவிய “பரிசுப் பெட்டி” மகிழ்ச்சியில் தினகரன்..

ஒரே நாளில் டிரென்டிங்…..நொடியில் பரவிய “பரிசுப் பெட்டி” மகிழ்ச்சியில் தினகரன்..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 3:04 am

அ.ம.மு.க.வுக்கு பரிசுப் பெட்டி சின்னம் அளிக்கப்பட்டுள்ள நிலையில்  அது நொடி நேரத்தில் மக்கள் மத்தியில் பரவ விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மாபெரும் சட்டப் போராட்டத்திற்கு பின், தேர்தல் ஆணையம் அமமுகவிற்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

முதலில் 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையம் எங்களுக்கு அனுப்பி இருந்தது. அதில் இருந்த பரிசுப் பெட்டியை பார்த்த போது, கடந்த 2016ல் ஜெயலலிதா அறிமுகம் செய்த பரிசுப் பொருட்கள் அடங்கிய தாய்-சேய் நலத்திட்டம் நினைவுக்கு வந்தது. எனவே சென்டிமெண்ட் காரணமாக, ‘பரிசுப் பெட்டி’ சின்னத்தை தேர்வு செய்தோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி உடனடியாக சின்னம் வழங்கியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு மிகவும் நன்றி என கூறினார்.

இந்நிலையில் வெள்ளியன்று காலையில் தினகரன் கட்சியான ,அமமுகவுக்கு ,பொதுச்சின்னமாக பரிசுப் பெட்டியைச் சின்னமாகக் கொடுத்தது தேர்தல் ஆணையம் கொடுத்ததுதான் தாமதம், சின்னம் அறிவித்த நொடிலிருந்து வேகமாக செயல்பட்ட அமமுகவினர்  குதூகளித்துக் கொண்டாடியதுடன், அதை ஜெட்வேகத்தில் விளம்பரம் செய்யத்துவங்கிவிட்டனர்.

தற்போது 2 ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளமான  டிவிட்டர் மூலம்  தமிழகம் மற்றும் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. அமமுகவின் தொழில்நுட்பப்பிரிவும் சமூக வலைதளங்களில் நெட்டிஷன்களிடம் கொண்டு செல்லும் பணிகளை தொடங்கிவிட்டனர்.

மேலும் தமிழகமெங்கிலும் தங்கள் சின்னத்தை விளம்பரம்செய்ய துள்ளிக்கொண்டு சுறுசுறுப்பாக வேலையை செய்யத்துவங்கிவிட்டனர் அமமுகவினர்.

—————————————- *✅ VOTE 💯%* *ELECTION  DATE-18.04.2019* —————————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!