17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » தூத்துக்குடி: பறக்கும் படை வாகன சோதனையில் 108 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..

தூத்துக்குடி: பறக்கும் படை வாகன சோதனையில் 108 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 2:59 am

தூத்துக்குடி  WGC ரோட்டில், தபால் தந்தி அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த KA 03 AA 5856 என்ற பதிவெண் கொண்ட வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 108 கிலோ தங்க நகைகள்  இருந்தது சோதனையில் தெரிய வந்தது ,தூத்துக்குடியில் உள்ள 4 முக்கிய நகைக் கடைகளுக்கு விநியோகிக்க கர்நாடகாவில் இருந்து கொண்டு வந்ததாக வேனை ஒட்டி வந்தவரால் தெரிவிக்கப்பட்டது

ஆனால், அதற்குரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பறக்கும் படை அதிகாரிகள் 108 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தங்க நகைககளை பார்வையிட்ட  மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அதிகாரி  சந்தீப் நந்தூரி அதனை கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

உரிய ஆவணங்கள் மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட்டுள்ளதா,போன்ற ஆவனங்களை அளித்த பின்னர் தங்க நகைகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

—————————————- *✅ VOTE 💯%* *ELECTION  DATE-18.04.2019* —————————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!