17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்து மெக்கானிக் பலி..

நிலக்கோட்டை அருகே கிணற்றில் விழுந்து மெக்கானிக் பலி..

எழுதியவர்: ஆசிரியர் March 30, 2019, 2:54 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே என். கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்னாங்க தேவர் வயது 60. இவர் இப்பகுதியில் ஆயில் என்ஜின் மின்மோட்டார்கள் சரிசெய்யும் மெக்கானிக்காக உள்ளார். அதேபோன்று நேற்று நிலக்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மோட்டார் சைக்கிள் மின்மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றில் இறங்கி உள்ளார்.

அப்போது தவறிக் கீழே விழுந்து பலத்த காயமடைந்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நிலக்கோட்டை தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு பொன்னாக்கு தேவரை தூக்கி வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்குள்ள டாக்டர் பரிசோதனை செய்தபோது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!