17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பள்ளிவாசலில் அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்ததால் பொது மக்கள் கடும் எதிர்ப்பு..வீடியோ..

மதுரை பள்ளிவாசலில் அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்ததால் பொது மக்கள் கடும் எதிர்ப்பு..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2019, 5:35 pm

மதுரை புதூர் சங்கர் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் 29.03.19 இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஜூம்ஆ தொழுகை சிறப்பாக நடைபெற்றது.

அப்போது தொழுகையை முடித்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுகவினர்கள் வரிசையாக நின்று கொண்டு அதிமுக விற்கு வாக்களிக்குமாறு நோட்டீஸ் விநியோகம் செய்து வாக்கு கேட்டனர்.

இதனை கண்ட அப்பகுதி இஸ்லாமிய மக்கள் அதிமுக–பாஜக கூட்டணிக்காக யாரும் வாக்கு கேட்க வர வேண்டாம் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் எவ்வளவு சமாதானம் செய்து யாரும் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதனையடுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ,ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுகவினர் உடனடியாக அங்கிருந்து திரும்பி சென்றனர்.

இறுதியில் அதிமுக-பா.ஜ.க கூட்டணியின் வாக்கு சேகரிப்பு தோல்வியில் முடிந்தது. அதிமுக வின் இந்த பின்னடைவிற்கு காரணம் பா.ஜ.கவுடன் கூட்டணி சென்றுள்ளதே காரணம் என அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவி வருகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!