17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி: குரூஸ்பர்னாந்து நினைவுநாள், கனிமொழி மாலை அணிவித்து மரியாதை..

தூத்துக்குடி: குரூஸ்பர்னாந்து நினைவுநாள், கனிமொழி மாலை அணிவித்து மரியாதை..

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2019, 2:17 pm

தூத்துக்குடி நகராட்சிசபை தலைவராக  குரூஸ்பர்னாந்து இருந்த காலத்தில்  முதன் முறையாக தூத்துக்குடி நகருக்கு தாமிரபரணி தண்ணீர் கொண்டுவரப்படது. அதன் நினைவாக அவருக்கு தூத்துக்குடியில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அவருடை நினைவைப் போற்றும் வகையில் ஆண்டு தோறும் அவருடைய நினைவு நாளன்று அவருடைய சிலைக்கு தலைவர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில்  இன்று அவருடைய 89 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அவரது திருஉருவச்சிலைக்கு தூத்துக்குடி மக்களவை தொகுதி  திமுக வேட்பாளர் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அவருடன் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ, திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

—————————————- *✅ VOTE 💯%* *ELECTION  DATE-18.04.2019* —————————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!