18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பள்ளி படிப்பை வீணாக்காமல் மார்க்க படிப்பு படிக்க ஒரு வாய்ப்பு….

கீழக்கரையில் பள்ளி படிப்பை வீணாக்காமல் மார்க்க படிப்பு படிக்க ஒரு வாய்ப்பு….

எழுதியவர்: ஆசிரியர் March 29, 2019, 1:35 pm

இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு தன் பிள்ளைகளை மார்க்க கல்வியை பயிற்றுவிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், உலக வாழ்கையின் போட்டியை சமாளிக்கும் நோக்கத்தில் அதற்கு முழுமையான நேரம் ஒதுக்க முடியாமல்  தவிப்பது உண்டு.

அந்த கவலையை தீர்க்கும் வண்ணம் கீழக்கரை கிழக்கும் தெரு முஸ்லிம் ஜமாத் ஹைராதுல் ஜலால்லியா அரபு மதரசா சார்பாக காயல்பட்டினம் மதரசா பாட திட்ட முறையில் சிறந்த மார்க்க அறிஞர்கள் குழுவை கொண்டு இறை வேத மனன பயிற்சி வகுப்புகள் இந்த வருடம் முதல் தொடங்க உள்ளனர்.

இதற்கான பெற்றோர்கள் கலந்துரையாடல் மற்றும் தெளிவுரை நிகழ்ச்சி  வருகின்ற 31.03.19, ஞாயிறு அன்று சுமார் மாலை 4மணி அளவில் கைரதுல் ஜலாலிய தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது.

மேலும் இப்படிப்புக்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் அலுவலகத்தில் இருந்து பெற்று கொள்ளலாம்.  இந்த நிகழ்ச்சி கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!