17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவசர கால அழைப்பு எண்-100 குறித்து காவலர்களுக்கு பயன்பாடு விளக்கம்..

அவசர கால அழைப்பு எண்-100 குறித்து காவலர்களுக்கு பயன்பாடு விளக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் March 28, 2019, 10:45 pm

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாசினி கலந்துகொண்டு 100எண்ணின் பயன்பாடுபற்றி  விளக்கினார்.

இதன் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள வாகனங்களிலும் ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டு, பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை நேரடியாக நம்பர் 100 மூலம் சென்னையில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அமையம் மூலம் அனுப்பி,  மீண்டும் நேரடியாக காவல் நிலையங்களில் உள்ள ஸ்மார்ட் போன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள ஸ்மார்ட் போண்களுக்கு தகவல்கள் பரிமாறப்படும். இதனால் காவலர்கள் விரைந்து புகார் தெரிவித்த இடங்களுக்கு செல்ல முடியும்.

இச்சேவையினை எவ்வாறு மேற்கொள்வது குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள காவலர்கள் கலந்துகொண்டு செயலியை பயன்படுத்துவது குறித்து புரிதல் ஏற்படுத்தப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!