17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயிர் பழிவாங்க காத்திருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க வாலசமுத்திரம் திமுக கோரிக்கை..

உயிர் பழிவாங்க காத்திருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க வாலசமுத்திரம் திமுக கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் March 28, 2019, 7:13 pm

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட வாலசமுத்திரம் முதல் குமாரபுரம் செல்லும் பிரதான சாலையில் மின் வாரியத்தால் அமைக்கப்பட்ட பிரதான மின் கம்பங்கள், இருந்து வருகின்றன. இதிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் சிறு,மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டுஇணைப்புகள் மின்சார வயர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் தினமும் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், கூலித்தொழிலாளர்கள் செல்லும் பிரதான சாலைப்பகுதியில் இருந்து வருகிறது,

அந்தச் சாலையில் இலகு ரக, கனரக வாகனங்களும் செல்லுகின்றன.அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான,மின் உற்பத்திநிலையமும் இயங்குகின்றது.விபத்தை ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உயிர் பலி வாங்க காத்திருக்கிறது.

இதை சரி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் சார்பிலும் சமூக நல அமைப்புகள்சார்பிலும்,கோரிக்கை வைக்கப்பட்டு இன்று வரை சரிசெய்யப்படாமல் இருந்து வருகின்றன,

இதை உடனடியாக வருமுன் காப்போம் திட்டத்தை போல் சீரமைக்க வேண்டும், என்று வாலசமுத்திரம் ஊராட்சி திமுக கிளைச் செயலாளர் வலசை சுரேஷ் குமார்  கோரிக்கை விடுத்துள்ளார்.                                          

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!