17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி நாடாளுமன்றத் தொகுதி – திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம்..

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி – திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 28, 2019, 6:46 pm

தென்காசி தொகுதிக்குட்பட்ட புளியங்குடியின் கே.வி.கே சாமி திடலில் வைத்து திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமார் அவர்களுக்கு வாக்கு கேட்டு மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பாக பொதுக்கூட்டம் 27.03.19 மாலை சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் உரையாற்றினர். மமக சார்பாக மாவட்டத் துணைத் தலைவர் அப்துர் ரஹ்மான் மற்றும் தமுமுக சார்பாக சமூக நீதி மாணவர் இயக்கத்தின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் முகம்மது ரபிக் ஆகியோர் கலந்து கொண்டு மோடி அரசை விரட்ட வேண்டியதின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு உரை நிகழ்த்தினர்.

பொதுக்கூட்டத்தில் தமுமுக-மமக திமுக கூட்டணி தோழமை கட்சிகள் நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!