இராமநாதபுரத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாஜ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். இதில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார். இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் ஒளி மயமான ஆட்சி மோடி தலைமையில் அமையும். அதிமுக., தலைமையில் தமிழகத்தில் மகத்தான கூட்டணி அமைந்துள்ளது.
கடந்த 55 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் பல்வே று ஆக்கப்பூர்வ திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் நலன் காக்க தனி துறை உருவாக்கம் மற்றும் ரூ 10 ஆயிரம் கோடி அளவிற்கு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூக்கையூர், பூம்புகார் பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு வழங்குவது போல், மீனவர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும், தமிழகம், புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறாது. பாஜக., அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். விவேகானந்தரை போன்று மோடியும் இரும்பு மனிதர். 2 ஜி ஸ்பெக்ட்ராம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு திமுக., காங்., கூட்டணி சார்பில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை காங்., ஆட்சியில் நிறைவேற்றப்பட வில்லை. காங்., ஊழல் கூட்டணி அமைத்துள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், மணிகண்டன், அன்வர் ராஜா எம்.பி., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராஜ நாயகம், பாஜ மாநில துணைத் தலைவர் குப்பு ராமு, அதிமுக மாவட்ட செயலர் முனியசாமி, பாஜ மாவட்ட தலைவர் முரளிதரன், தேமுதிக மாவட்ட செயலர் சிங்கை ஜின்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.