கோவில்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி காரியாலயம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மட்டும் தமிழிசை சௌந்திரராஜனை ஒன்றரை லட்சம் வாக்குகள் அதிகத்தில் வெற்றி பெற செய்வோம். தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனும் அதே அளவில் பணியாற்றுகின்ற நேரத்தில் தமிழகத்திலேயே 3 லட்சம் வாக்குகள் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக தூத்துக்குடி மக்களவை தொகுதி இருக்கும். நமது வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி.
நமது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் திறமையான முதல்வர் வேண்டும் என கூறி நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். ஆனால், திமுக கூட்டணியில் பிரதமர் யாரென்று கூற லாயகில்லாமல் தேர்தலை சந்திக்கின்றனர். காங்கிரசும், தேசிய கட்சியாக இருந்தாலும் கூட பிரதமர் யாரென்று கூறமுடியவில்லை.
தமமுக தலைவர் ஜான்பாண்டியன், புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஒரே மேடையில் அமர வைத்த பெருமை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சேரும். வாக்கு வங்கி எங்கிருக்கிறதோ அத்தனை கட்சிகளும் எங்களுடன் மேடையில் உள்ளன. இதனால் 3 லட்சம் அல்லது டெபாசிட் வாங்குவதற்கு கூட அரிதான நிலையை வருகின்ற தேர்தலில் உருவாக்குவோம்.
இந்த கூட்டணி இந்தியாவிலேயே 100 சதவீத வெற்றியை பெற்று, மீண்டும் பிரதமரல்ல, என்றுமே பிரதமர் நரேந்திர மோடி என்ற வரலாற்றை உருவாக்கின்ற கூட்டணியாக இருக்கும், என்றார்.




You must be logged in to post a comment.