வடசென்னை அமமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் ஆதரித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பேசிய டிடிவி தினகரன் ஆளும் அதிமுக அரசு எத்தனையோ சூழ்ச்சிகள் செய்து சின்னம் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள்.
இதற்கு மத்தியில் ஆளும் பிஜேபி அரசு உறுதுணையாக இருக்கிறது என குற்றம் சாட்டினார். ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெயக்குமார் தனது மகனை ஏன் தென்சென்னையில் வேட்பாளராக களம் இறங்கினார்.
வடசென்னையில் வேட்பாளராக களமிறக்கி இருந்தால் அவர் பயந்து போய் தென் சென்னையில் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார் என விமர்சனம் செய்தார். மத்தியில் ஆளும் அரசிடம் மாநிலத்தில் ஆளும் அரசு மண்டியிட்டு கிடக்கிறது.
இதை பார்க்கும் போது மக்கள் விரோத ஆட்சி ஆக இருக்கிறது. மாநிலத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் இந்த மக்கள் விரோத கூட்டணி அரசை முடிவுக்குக் கொண்டுவர மக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
எங்களது கட்சிக்கு கடைக்கோடி மாவட்டம் வரை மக்களிடையே அதிக அளவில் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் மிகுந்த எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் பேசினார்.
செய்தியாளர்;- அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.