17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பனைத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திமுக வேட்பாளர் கனிமொழியிடம் கோரிக்கை மனு..

பனைத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திமுக வேட்பாளர் கனிமொழியிடம் கோரிக்கை மனு..

எழுதியவர்: ஆசிரியர் March 27, 2019, 1:24 pm

தூத்துக்குடி   நாடாளுமன்ற  தொகுதி  திமுக  வேட்பாளர்   கனிமொழியை    தமிழ்நாடு  பனைத் தொழிலாளர்கள் சங்கத்தின்   சார்பில்  பொதுச்செயலாளர்   இராயப்பன்   தலைமையில்  சந்தித்து  மூன்று  கோரிக்கை  அடங்கிய  மனுவை இன்று  அளித்தனர்

மனுவில்,                                 தமிழகத்தில்  மீண்டும்  பணை வாரியம்  அமைத்து   நல்ல  திட்டங்களை  செயல்படுத்த  வேண்டும்

ஆந்திரா,   கர்நாடகா,கேரளா, பாண்டிச்சேரி’ போன்ற  மாநிலங்களைப் போல   தமிழ்நாட்டிலும்  தாய்ப்பாலுக்கு   சமமான கள் ,பதனீர்  இறக்கி  விற்க  அனுமதி  வழங்கி  தமிழ்நாட்டில்  உள்ள  30  லட்சம்   குடும்பத்தையும்  வாழ்வாதாரத்தில்  முன்னேற  செய்ய வேண்டும்

பனைத் தொழில் இல்லாத  ஆறு மாத காலத்தில்  அந்த மாவட்டம்  வாரியாக பனைத்தொழிலாளர்ளை  கண்டறிந்து அவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய்    10 ஆயிரம்  வழங்க வேண்டும் என மனுவில் கோரினர்

நிகழ்வின்போது திமுக  தெற்கு மாவட்ட  பொறுப்பாளரும் திருச்செந்தூர்  சட்ட மன்ற உறுப்பினருமான அனிதாராதாகிருஷ்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புதுக்கோட்டைசெல்வம், பனணத் தொழிலாளர்  சங்க  நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள்  உடனிருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!