17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை..

எழுதியவர்: ஆசிரியர் March 26, 2019, 1:55 pm

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தொழில் முனைவோர் வளர்ச்சி கழகம் சார்பாக இளங்கலையில் அறிவியல் துறையில் பட்டம் பெற்ற மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில் தொழில் முனைவோருக்கான 20 நாள் பயிற்சிப் பட்டறை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன்  தலைமையேற்று துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக கீழக்கரை சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர் லெட்சுமணன், குஜராத் மாநிலம் அகமதாபாத், தொழில்முனைவோர் வளர்ச்சி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கிராம வளர்ச்சிக் குழும இயக்குநர. தாமஸ் பீட்டர், கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் இளங்கலை மேலாண்மைத்துறை தலைவர் விமலி உட்பட பலர் கலந்து கொண்டு தொழில் முனைவோர் குறித்த பல்வேறு கருத்துக்களை மாணவ மாணவியரிடையே எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 20 மாணவ மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வங்கிகள் மூலமாக தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் மானியங்கள்ää தனித்திறன் மேம்பாடு, குழு விவாதம், திட்ட அறிக்கை தயார் செய்தல், தொழில் வளர்ச்சி மேம்பாடு, ஆளுமைத் திறன் வளர்த்துக் கொள்ளுதல், பொருட்களை உற்பத்தி செய்தல்ää சந்தையிடுதல், விலை நிர்ணயம் செய்தல் மற்றும் மாவட்ட சிறுகுறு தொழிற்சாலைகளை பார்வையிடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆனந்த், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சுலைமான், பேராசிரியர் ஏ.ராஜமாணிக்கம், பேராசிரியர் திருமதி.து.எஸ்தர் கண்மணி ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் ளு.ஆ.முகம்மது யூசுப் செயலர் சர்மிளா, மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!