18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானலில் வனத்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல்..

கொடைக்கானலில் வனத்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே மோதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 25, 2019, 10:36 am

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குணா குகை பகுதியில் வனத்துறையினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்குள்ள கடைகளில், எளிதில் தீப்பற்றும் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வனத்துறை ஊழியர்கள் சோதனை செய்தபோது, மாரி என்ற பெண் நடத்தி வரும் கடையில் ஸ்டவ் பயன்படுத்தியதை கண்டுபிடித்துள்ளனர். அதனை பறிமுதல் செய்ய முயன்றபோது எழுந்த வாக்குவாத‌த்தில் வனத்துறை ஊழியர் ரித்தீஸ் என்பவர் பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக கடைக்காரர்கள் வனத்துறை அதிகாரி ரித்தீஸை தாக்கியதால் அவர் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!