தமிழக மக்களின் வாழ்வியலில் ஒன்றான மத நம்பிக்கையை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் குறைகூறி வருவதால் மக்கள் அவர்களை புறக்கணிப்பாளர்கள் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடும் அவர், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர் அணியனர் தரம்தாழ்ந்த விவாதம் செய்தாலும் நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்றார். நேர்மறை அரசியலை எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் எங்களது நிலைபாடு என்ற அவர், மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் தமிழகத்திற்கு அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கும் என்பதை இன்று எங்கள் கூட்டணி நிரூபித்து வருகிறது.
தமிழகத்தில் எதிர் கட்சியினரிடம் நாகரீகம் மிக மிக குறைந்து வருகிறது, தமிழகம் நாகரீக அரசியலுக்குள் வர வேண்டும். ஒரு சின்ன களங்கம் கூட சொல்ல முடியாது, வெளிப்படையான அரசியல் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். தமிழக மக்களின் வாழ்வியலில் ஒன்றான மத நம்பிக்கையை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் குறைகூறி வருவதால் மக்கள் அவர்களை புறக்கணிப்பாளர்கள் என்றார்.
திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையின் நிலைபாட்டை பற்றி குறிப்பிடவில்லையே ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் திமுக இரட்டை வேடம் போட்டு கொண்டிருக்கிறார்கள் என்றார். ஊழல் மற்றும் ஊழலுக்கு எதிராக நேர்மையான அரசியலை மேற்கொண்டு வருகிறோம்.
பாராளுமன்ற தகவல் படி மாநிலங்களவையிலே மிகக் குறைவான நாட்களே சென்றுள்ள மூன்று நபர்களில் ஒருவராக இருந்துள்ள எதிர் கூட்டணி வேட்பாளர் கனிமொழி எப்படி மக்களவையில் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றார். நேர்காணலுக்கு வருவதற்கு கூட ஒரு தொண்டனை அனுமதிக்காமல் திமுகவில் கனிமொழி மட்டுமே நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார் என்றார் அந்த கட்சியினர் ஜனநாயகத்தை எப்படி பற்றி பேச முடியும் என்றார்.
இந்த தேர்தல் ஊழலுக்கும்- ஊழலற்ற தன்மைக்கும், நேர்மையற்ற அரசியலுக்கும்- நேர்மைக்கும் இடையே நடக்கும் போட்டியாக கருதுகிறேன் எனவே எங்களை யாரும் குறை சொல்ல முடியாது என்றார். வரும் 26ம் தேதி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வர இருக்கிறார் அன்றைய தினம் விஷன் டாக்குமேண்டரி வெளியிடப்படும்
தொடர்ந்து தூத்துக்குடி விசைபடகு மீனவர்கள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து கோரிக்கைகள் வைத்தனர். மேலும் கூறுகையில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக அரசகுமாரை கட்சி அறிவித்துள்ளதாக தெரிவித்தார். கூட்டத்தில் கரு நாகராஜன், நீல முரளி யாதவ் , மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் சிவராமன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.