18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கருணாநிதி, எம்ஜிஆர் தொகுதி மாறி போட்டியிடவில்லையா? பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி..

கருணாநிதி, எம்ஜிஆர் தொகுதி மாறி போட்டியிடவில்லையா? பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி..

எழுதியவர்: ஆசிரியர் March 24, 2019, 6:41 pm

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப நிறைவேற்றப்படும். ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான விமான நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியன மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மூலம் அமைக்கப்படும். இலங்கை, இந்திய சர்வதேச எல்லையில் தமிழக மீனவர்கள் தொல்லையின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு பாஜ., ஆட்சியில் இலங்கை கடற்படை சிறைப்பிடித்த 1,900 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை காப்பதில் சிறந்த வலிமையான ஆளுமை மிக்க பிரதமர் மோடி தவிர வேறு யாருமல்ல. என்னை வெளி மாவட்ட நபர் என வேறுபடுத்தி பார்க்க வேண்டாம். மக்கள் சேவையை மட்டும் பாருங்கள். கடந்த காலங்களில் முக்கிய தலைவர் கள் கூட தொகுதி மாறி போட்டியிட்டு வென்றுள்ளனர். கருணாநிதியும் தொகுதி மாறி போட்டியிட்டவர் தானே. எம்ஜிஆர்., கூட ஆண்டிபட்டி, அருப்புக்கோட்டை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். காசி முதல் ராமேஸ்வரம் வரை விரிந்து பரிந்துள்ள நம் நாட்டில் காசியை உள்ளடக்கிய வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதை பெருமிதமாக கருதுகிறேன்.

காரைக்குடி – கன்னியாகுமரி இடையேயான ரயில் பாதை திட்டம் குறித்து விவரம் கோரப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கையான இந்த கூட்டணி வெல்லும் என்றார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, பாஜக., மாவட்ட தலைவர் முரளிதரன், பாஜக ., மாநில துணைத் தலைவர் குப்புராம், தேமுதிக., மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா, அதிமுக முன்னாள் மாவட்ட செயலர் ஆனி முத்து மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!