18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறுமியை கடத்தி கட்டாய கல்யாணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது ..

சிறுமியை கடத்தி கட்டாய கல்யாணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது ..

எழுதியவர்: ஆசிரியர் March 24, 2019, 6:38 pm

மதுரை மாநகர் செல்லூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை நேற்று காணவில்லை என்று சிறுமியின் தந்தை D1-தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி.அமுதா வழக்கு பதிவுசெய்து புலன்விசாரணை செய்ததில் சிறுமியை கடத்தி சென்று கட்டாய கல்யாணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்தது விவேக் 23/19, த/பெ சண்முகம், மீனாட்சிபுரம், செல்லூர், என விசாரணையின் முடிவில் தெரியவந்தது.

அதனடிப்படையில் விவேக் மீது POCSO வழக்கு பதிவு செய்து அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!