இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பிரிவு சார்பில் டிப்ளமா இறுதியாண்டில் வளாக தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 582 மாணவ மாணவிகளுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா கல்லூரியின் புதியகருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்வர் பேராசிரியர் டாக்டர்.அ.அலாவிதின் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலர் திரு.எஸ். மரியதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் துணைமுதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு முதன்மை ஓருங்கிணைப்பாளாருமான திரு. அ.சேக்தாவுது ‘‘வேலைவாய்ப்பு 2019’’ ஆண்டு அறிக்கை வாசித்தார்.
இவ்விழாவில் கேட்டர்பில்லர் நிறுவனத்தின் பொது மேலாளரும் சென்னை மண்டல சி.ஐ.ஐயின் தலைவருமான திரு.என்.அன்புசெழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த பணிநியமன ஆணைகளை மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் பெற்றுக்கொண்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் பேசுகையில் தங்கள் பிள்ளைகள் இக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதினால் சிறந்த மாணவர்களாக திகழ்கின்றனர், மேலும் அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பையும் பெற்று தருகின்றனர் என்று பெருமிதம் கொண்டனர். சிறப்பு விருந்தினர் பேசுகையில் இக்கல்லூரி மூலம் 582 மாணவ மாணவியர்கள் டி.வி.எஸ்.ட்ரைனிங் மற்றும் சர்வீசஸ் லிமிடெட், ஜஸ்டயல் லிமிடெட், லுகாஸ் டி.வி.எஸ். சென்னை ää அவலான் டெக்னாலஜி சென்னை, டி.வி.எஸ்.சுந்தரம் ஆட்டோ காம்போனன்ட்ஸ், அசோக் லேலாண்ட் லிமிடெட் ஓசூர் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் மூலமாக பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர் என்பதும் 100 சதவீத வேலைவாய்ப்பு இப்பிரிவின் மூலம் வழங்கப்பட்டது என்பதையும் பாராட்டிப்பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஏ.அப்பாஸ் மைதீன், கல்லூரி டீன்.முகம்மது ஜஹபர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். இவ்விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர்;.ஜெ.கணேஷ்குமார் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் டாக்டர்.அ.அலாவுதீன் மற்றும் துணைமுதல்வர் திரு.அ.சேக்தாவூது ஆகியோர் செய்திருந்தனர்.








You must be logged in to post a comment.