18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் அமமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு..

கீழக்கரையில் அமமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 24, 2019, 12:33 am

இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் இன்று கீழக்கரை நகரின் முக்கிய பிரமுகர்கள், ஜமாத்தார்கள், சமுதாய தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இவர்களுடன் கீழக்கரை நகர் செயலாளர் கே.ஆர்.சுரேஷ், மாநில மகளிரணி இணைச்செயலாளர் கவிதா, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம், மண்டபம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் மற்றும் நகர் து.செயலாளர் சிவா,பொருளாளர் விஜயகுமார், அவைத்தலைவர் நூருல் ஹக்,அம்மா பேரவை செயலாளர் ஜீவா, இளைஞரணி செயலாளர் சாகுல் ஹமீது, சுலைமான், மாவட்ட பிரதிநிதி மகேஷ், 6வது வார்டு செயலாளர் முனீஸ்வரன், ராமசாமி, பாண்டித்தேவர், முத்துகுமார், மீரான், சமீம்தீன், முபாரக், ஜாவித், ஹாரிஸ், மணிகண்டன், கே.ஜி.பாலமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அபுதாஹிர், இணைச்செயலாளர்கள் ஜெகன்ராஜ், வினோத்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தோழமை கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சி கட்சி எஸ்.டி.பி.ஐ இராமநாதபுரம் தொகுதி துணைத் தலைவர் சித்திக் மற்றும் தொகுதி செயலாளர் நூருல் ஜமான், கீழக்கரை நகர் தலைவர் கீழை அஸ்ரப்,செயலாளர் காதர், பொருளாளர் சகுபர் சாதிக் கிழக்கு கிளை தலைவர் பகுருதீன் மற்றும் மேற்கு கிளை செயலாளர் அசாருதீன் உட்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், முக்குலத்தோர் பாசறை மாவட்ட செயலாளர்நாகராஜ், ஒன்றிய செயலாளர் பொன்மனம்,உட்பட அம்மா பேரவை செயலாளர் ஜீவா ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!