17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 678 புடவைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்..

சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 678 புடவைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2019, 6:49 pm
சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 678 புடவைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல். வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன தேர்தல் அலுவலர்கள் விசாரணை.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா மற்றும் இலவசங்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், துத்தநாக உலோகம், சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக சேலம் ஜங்சன் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று மாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 678 புடவைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 678 புடவைகளையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா அல்லது வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டதா என வாகன ஓட்டுநரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!