18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ஆலோசனை

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ஆலோசனை

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2019, 6:34 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2019 பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள தூத்துக்குடி நகர் புறம், ஊரகம் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணிபுரியும் காவல் துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் என்னென்ன செய்ய வேண்டும் மற்றும் என்னென்ன செய்யக்கூடாது போன்ற அறிவுரைகளையும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றியும் தேர்தல் பாதுகாப்பு பணி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ஆகியோர் அறிவுரை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு, காவல் துணை கண்காணிப்பாளர்கள், தூத்துக்குடி நகரம் பிரகாஷ், ஊரகம் முத்தமிழ், மாவட்ட குற்றப்பிரிவு ரமேஷ், ஆயுதப்படை மாரியப்பன், தேர்தல் கட்டுப்பாட்டு அறை பால்துரை, தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் செல்வி. அருள் ரோஸ் சிங், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி சத்திய நாராயணன்;, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 700 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!