17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியீடு..

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் வெளியீடு..

எழுதியவர்: ஆசிரியர் March 23, 2019, 10:56 am

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி 22.03.19 நேற்று நள்ளிரவில் திடீரென அறிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதால் அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை பல கட்டங்களாக தேர்வு செய்து அக்கட்சி அறிவித்து வருகிறது.

ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படாமல் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தான் நேற்று தமிழகம் உட்பட பிற மாநிலங்களையும் சேர்ந்து 35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

இதன்படி, திருவள்ளுர் தொகுதி(தனி) ஜெயக்குமாரும், கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லக்குமாரும், ஆரணியில் டாக்டர் விஷ்ணுபிரசாத்தும், கரூரில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், தேனி தொகுதியில் ஈ வி கே எஸ் இளங்கோவன், விருதுநகரில், மாணிக்தாகூர், கன்னியாகுமரி தொகுதியில் எச் வசந்த்குமார் மற்றும் புதுச்சேரியில் வைத்திலிங்கம் ஆகியோரது பெயர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா போட்டியிடும் நிலையில், நேற்று நள்ளிரவு வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!