17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமாருக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமாருக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2019, 6:15 pm

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமாருக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய  பொருளாளரான வசந்தம் ஜெயக்குமார்  விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில்  விளாத்திகுளம் வந்த அவருக்கு திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் வைப்பாற்றாங்கரையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று தனியார் திருமண மண்டபத்தில் தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் அறிமுகம் செய்துவைத்தார். வசந்தம் ஜெயக்குமாருக்கு கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன்,சின்ன மாரிமுத்து, செல்வராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, கூட்டணி கட்சிகளான மதிமுக ஒன்றிய செயலாளர்கள் எரிமலை வரதன்,மணிராஜ்,குறிஞ்சி,மார கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் புவிராஜ்,பாலமுருகன்,இ.கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பிச்சையா,ஒன்றிய செயலாளர் முள்ளன், விடுதலை சிறுத்தை காங்கிரஸ்,உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!