17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ் விவசாயிகள் சங்க வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்..

தமிழ் விவசாயிகள் சங்க வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்..

எழுதியவர்: ஆசிரியர் March 21, 2019, 5:43 pm

தமிழ் விவசாயிகள் சங்கத்தின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக தூத்துக்குடி தமிழ் விவசாயிகள் சங்கத்தின் வடக்கு மாவட்ட தலைவர் நடராஜன் அவர்கள் 21.03.19 இன்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மாற்று வேட்பாளராக சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.இந்நிலையில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி மற்றும் ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பின்பு விவசாய சங்கத்தலைவர் கூறும் போது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சட்டமன்றத்தில் குரல் எழுப்ப எவருமே இல்லை. விவசாயிகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிப்பதற்கு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கம் வேட்பாளரை நிறுத்தி உள்ளது என்றும், பொதுமக்களும் விவசாயிகளும் தமிழ் விவசாயிகள் சங்க வேட்பாளருக்கு வாக்களித்து சட்டமன்றத்தில் விவசாயிகளின் குரல் பிரதிபலிக்க செய்ய வேண்டும் என்பதாகவும் கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!