17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 20, 2019, 5:13 pm

சென்னை அம்பத்தூர் காவல் மாவட்டம் சார்பில் துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இணைந்து அம்பத்தூர் பேருந்து நிலையம் முதல் வடக்கு பூங்கா சாலை வழியாக அம்பத்தூர் நகரின் மிக முக்கிய பிரதான சாலை புதூர் வழியாக ராக்கி திரையரங்கம் வரை சுமார் 4 கிலோமீட்டர் வரை பிரமாண்ட அணிவகுப்பு 20.03.19 இன்று சிறப்பாக நடைபெற்றது.

அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு. D. ஈஸ்வரன் அவர்களின் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த கொடி அணிவகுப்பில் அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பொற்கொடி கலந்து சிறப்பித்தார்.

இந்த அணிவகுப்பில் 100 க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!