18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தண்ணீர் தொட்டியில் இருந்தும் வீணாகும் நீர்.. சேமிக்க கோரிக்கை..

தண்ணீர் தொட்டியில் இருந்தும் வீணாகும் நீர்.. சேமிக்க கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் March 19, 2019, 10:30 am

புதிய தண்ணீர் தொட்டி அமைத்து வீணாகும் தண்ணீரை சேமித்திட போதிசேவா சங்கம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை. நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம், குத்தப்பாஞ்சான் கிராமம், பரும்பு நகர் பகுதியில் கீழ் மட்ட தொட்டி கட்டுவதற்க்கு டெண்டர் விடப்பட்டு 6 மாதம் மேல் ஆகியுள்ளது.

இதில் டெண்டரில் உள்ள தொகைக்கு ஏற்றாற் போல் தொட்டி கட்டாமல் கிடைப்பில் போடப்பட்டுள்ள அவல நிலை காணப்படுகிறது. மேலும் இந்த கீழ் மட்ட தொட்டியில் நீர் நிரப்ப தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து அமைக்கப்பட்ட பைப்பிலிருந்து மக்கள் தேவைக்கு போக உள்ள நீர் வீணாகும் அவலநிலை உள்ளது.

ஏற்கனவே குத்தப்பாஞ்சான் ஊராட்சி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கட்ட வேண்டிய தொகை ரூ.5,00,000 மேல் பாக்கி உள்ளதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  போதி சேவா சங்கம் திருநெல்வேலி மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!