17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய நீதி கட்சி தலைவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ..

புதிய நீதி கட்சி தலைவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ..

எழுதியவர்: ஆசிரியர் March 19, 2019, 3:01 am

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டி .

புதிய நீதிக் கட்சி மாநில ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் வேலூரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அக்கட்சி தீர்மானித்தது. அதன் பிறகு வேலூரில் உள்ள  பென்ஸ் பார்க் ஓட்டலில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இரவு நடந்தது.

இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடுவது எனக்கு மிக பெரிய பலம். பாமக, தேமுதிக, தமாக பிஜேபி, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளது. மேலும்.வேலூர் தொகுதிக்கு அமைச்சர் வீரமணி பொறுப்பாளராக வந்து இருப்பது எங்களுக்கு பெரிய பலம். ஆகவே நாங்கள் எளிதாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் கூட்டணி கட்சியினர் செய்தியாளர் சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார்:- வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!