18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முப்பெரும் விழா..

பூபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முப்பெரும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 19, 2019, 2:58 am

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பூபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்வு,விளையாட்டு விழா,பள்ளி ஆண்டுவிழா என முப்பெரும் விழா கடந்த 15.03.19 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இதுகுறித்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பரசி மற்றும் SSA ஆசிரியர் சகிலா,பள்ளி மாணவ மாணவிகள்,மாணவர் சங்க திருநெல்வேலி மாவட்ட தலைவர் பொன் சேகர் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் போது பூபாலசமுத்திரம் கிராம மக்கள் அப்பள்ளிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கல்விச் சீராக வழங்கினர்.

மேலும் பள்ளி ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கல்வி,கலாசார கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!