18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக தன் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக தன் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் March 18, 2019, 6:02 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18/03/2019, 11.30 மணியளவில்  தன் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிராபானு கமால்  தலைமையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வாணி கிராமம், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் Dr.H.பாத்திமா வரவேற்புரை ஆற்றினார். பின்பு முதலாமாண்டு மாணவி ஆங்கிலத் துறையைச் சார்ந்த C.அருணா பிரித்தியும், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த S.நிவேதிதாவும் சுத்தத்தை பற்றி மாணவ மாணவிகளுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்தனர். மேலும்,” சுத்தம் பேணுவோம், சுகம் காணுவோம்” என்றும் சுத்தம் சுகம் தரும் சுகாதாரம் நாட்டைக் காக்கும்” என்று உறுதிமொழி எடுத்தனர். இறுதியாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதல்வர் M.உமாதேவி நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!