18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் மணல் சிற்பம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு கண்காட்சி..

இராமநாதபுரத்தில் மணல் சிற்பம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு கண்காட்சி..

எழுதியவர்: ஆசிரியர் March 17, 2019, 2:45 pm

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கும் நோக்கில் வாக்களர்கள் அனைவரும் சுதந்திரமாக, நேர்மையாக தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ராமேஸ்வரத்தில் மார்ச் 15ல் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நூறு சதவீதம் நேர்மையாக வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மணல் சிற்பம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஓவிய கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் திறந்து வைத்து பார்வையிட்டார். வாக்கு விற்பனைக்கல்ல, நோட்டுக்காக அல்ல ஓட்டு, 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் மணல் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. கோட்டாட்சியர் ஆர்.சுமன், தாசில்தார் முத்துலட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ம.கயிலைச்செல்வம் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!