17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குவியல், குவியலாக நகைகளுடன் ரதிமீனா கன்டெய்னர் லாரி.. மடக்கிய பறக்கும்படை.. மதுரையில் பரபரப்பு!- கவரிங் நகைகள் என தகவல்..

குவியல், குவியலாக நகைகளுடன் ரதிமீனா கன்டெய்னர் லாரி.. மடக்கிய பறக்கும்படை.. மதுரையில் பரபரப்பு!- கவரிங் நகைகள் என தகவல்..

எழுதியவர்: ஆசிரியர் March 17, 2019, 2:38 pm

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், பறக்கும் படையினர் தமிழகம் முழுக்க ஆங்காங்கே, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, இன்று (17/03/2019) மதுரையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தியபோது, ரதிமீனா ஸ்பீடு பார்சல் சர்வீஸ், என்ற பெயர் கொண்ட மினி லாரி அங்கு வந்தது.

லாரியில் உள்ள சரக்கு தொடர்பாக டிரைவரிடம் பறக்கும் படையினர் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படையினர், லாரியின் சரக்கு பகுதியைத் திறந்து பார்த்தனர்.

அப்போது, லாரியின் உள்ளே, ஆறு பண்டல்களில் நகைகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உரிய ஆவணங்கள் இல்லாததினால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த லாரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தங்க நகையா, அல்லது கவரிங் நகையா என்பது தொடர்பாக சோதனை நடத்துவதற்கு நகை பரிசோதகர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கன்டெய்னரில், ஆறு பண்டல்களில் நகைகள், பிடிபட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 500 கோடி ரூபாய் நோட்டுகளுடன் கூடிய கண்டெய்னர் லாரிக்கே இன்னும் சரியான பதில் கிடைக்காத நிலையில், இப்போது கண்டைனர் நிறைய நகைகள் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

வி.காளமேகம், மதுரை
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!