17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் பழச்சாறு..

வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் பழச்சாறு..

எழுதியவர்: ஆசிரியர் March 17, 2019, 12:05 pm

மதுரை மாநகரில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் போக்குவரத்து காவலர்களுக்கு நீர் மோர் மற்றும் பழச்சாறு வழங்க காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இன்று (17/03/2019( மதுரை மாநகரில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள நீர் மோர் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வினியோகம் செய்யவும் மதுரை மாநகர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளதாகவும் காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!