17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அணைப்பட்டி வைகை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேர் கைது..

அணைப்பட்டி வைகை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 10:32 pm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி தேர்தலும், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுவதை ஒட்டி நிலக்கோட்டை பகுதியில் ஆங்காங்கே போலீஸ் வாகன சோதனை களும் போலீசார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி வாகன சோதனை போலீசார் ஈடுபட்டபோது நிலக்கோட்டை அருகே சிறு நாயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் வயசு 41. மற்றும் கே. குரும்பபட்டி சேர்ந்த மகாராஜன் வயது 33 . 2,பேர்களும் மாட்டுவண்டியில் அணைப்பட்டி வைகை ஆற்றில் அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தனர். அப்போது போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் விளாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து அரசு அனுமதி இல்லாமல் மணல் 2 பேர்களையும் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட் மேஜிஸ்ட்ரேட் ரிஸ்னா பர்வின் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் 15 நாள் சிறைக் காவலில் அடைக்க உத்தரவிட்டார் இதன் பின்னர் 2 பேர்களும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!