17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 35 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை பறிமுதல்..

மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 35 லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 10:15 pm

நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து மதுரை மாவட்டத்தில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்ட 70 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது, அவனியாபுரத்தில் 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், திண்டுக்கல் மெயின் ரோட்டில் 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயும், அழகர்கோயில் சாலையில் 72 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது,

இதில் அவனியாபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மெர்க்கண்டல் வங்கிக்கு சொந்தமானது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய ஆவணங்கள் கொடுத்து பெற்று கொள்ளலாம் என மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!