17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்..

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 4:39 pm

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு அனைத்து கட்சிகள், இயக்கங்கள் சார்பாக கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் 15.03.19 நேற்று கோவையில் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம்,நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்த துணை சபாநாயகர் அதிமுக MLA ஜெயராமன் மகன்கள் உட்பட பார் நாகராஜன் _ திருநாவுக்கரசு கும்பலை இந்த அரசும்,காவல்துறையும் பாதுகாத்து வருவதாகவும், இந்த பாலியல் வன்கொடுமைக்கு Sp பாண்டியராஜன் நிற்கிறார் என்றும் கோஷங்களை எழுப்பியும், தமிழகமே திரண்டெழுந்து இந்த காம கொடூரர்களை மக்கள் மத்தியில் தூக்கிலிட வேண்டும். என்பதை வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர்.

மிகக்கொடூரமாக அரங்கேறியுள்ள இந்த பாலியல் வன்முறை சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து கட்சியினரும் இணைந்து மனித சங்கிலி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!