18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோலப் போட்டி..

வேலூரில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோலப் போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் March 16, 2019, 12:53 am

வேலூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கோலம் போட்டி நடத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கினை தவறாது அளித்திடும் வகையில், வேலூர் ஆட்சியர் ராமன், விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஆவின் நிறுவனத்தின் நெய் மோர் டப்பாக்களிலும், கேஸ் சிலிண்டர்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பப்பட்டது. இன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கோலம் போட்டி நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான பெண்கள் வண்ண கோலமிட்டு வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கே.எம்.வாரியார் வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!