18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்…

இராமேஸ்வரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் March 15, 2019, 12:07 pm

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ல் நடக்கிறது. மார்ச் 10 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப் பட்டுள்ளன. பதினெட்டு வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் உள்பட அனைத்து வயதினரையும் கட்டாயம் வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதில் தேர்தல் பணியில் அலுவலர்கள் முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 784 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும், கண்டிப்பாக வாக்களித்து மக்களாட்சி தத்துவம், மாண்பை பேணி பாதுகாக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் வாக்காளர்கள் முன்வர வேண்டும் என்பதை ராமேஸ்வரத்தில் வாக்காளர் உறுதி மொழி கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் சுமன் உடனிருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!