17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி சாக்குகொடவுனில் திடீர் தீ விபத்து. ரூ 3 லட்சம் மதிப்புள்ள பொருள் சேதம் …

உசிலம்பட்டி சாக்குகொடவுனில் திடீர் தீ விபத்து. ரூ 3 லட்சம் மதிப்புள்ள பொருள் சேதம் …

எழுதியவர்: ஆசிரியர் March 14, 2019, 12:00 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கருப்பு கோவில் தெருவில் கவுதம் என்பவருக்கு செந்தமான கட்டிடத்தில் அசோக்குமார் என்பவர் சாக்கு குடோனாக பயன்படுத்தி வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணிக்கு பிளாஸ்டிக் சாக்கு குடோனில் தீப்பிடித்து எரிந்ததில் 60 ஆயிரம் பிளாஸ்டிக் சாக்குகள் எரிந்து நாசமாயின.

சம்பவமறிந்த உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் வந்து தீயை அணைத்தனர். எரிந்த சாக்குகளின் மதிப்பு ரூ 3லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் மின்கசிவினால் ஏற்பட்டதா அல்லது யாரேனும் திட்டமிட்டு தீ வைத்தார்களா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!