17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் நெரிசலும், விபத்துக்களும்…

மதுரையில் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் நெரிசலும், விபத்துக்களும்…

எழுதியவர்: ஆசிரியர் March 13, 2019, 5:14 pm

மதுரை நகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக மதுரை பைபாஸ் சாலை திருப்பரங்குன்றம் சாலை கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாகனங்களை நிறுத்துவதால் பல விபத்துகள் தொடர்ந்து ஏற்படுகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் மீண்டும் அத்துமீறல்கள் நடந்து கொண்டே வருகிறது.

மேலும் உரிமம் இல்லாத ஆட்டோக்களை அபராதம் விதிப்பதோடு விட்டு விடாமல் அதை பறிமுதல் செய்து உரிமம் இல்லாமல் ஓட்டுனருக்கு சிறை தண்டனையும் வழங்க வேண்டும் எனவும், குடிபோதையில் இயக்கும் ஆட்டோக்களை பறிமுதல் செய்யவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

இது போன்ற நிகழ்வு தினமும் மதுரை பைபாஸ் சாலையில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.  மேலும் இன்று (13/03/2019) ஷேர் ஆட்டோ மோதியதில் நிலைதடுமாறி ஒருவர் தடுப்பு சுவற்றில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!