17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » ஏர்வாடி அருகே 400 கிலோ கடல் அட்டை பறிமுதல்..

ஏர்வாடி அருகே 400 கிலோ கடல் அட்டை பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 12, 2019, 11:22 am

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி புல்லந்தை கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் மெரைன் போலீசார் இன்று (மார்ச் 12) அதிகாலை 4:30 மணியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அது வழி வந்த டி என் 18 எம் 5320 என்ற வாகனத்தை சோதனை செய்தனர்.

அதில் நன்கு பதப்படுத்திய கடல் அட்டைகள் மூடைகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்து. 13 மூடைகளில் இருந்த 400 கிலோ கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்குக்குடி மாவட்டம் கிருஷ்ணாபுரம் முகமது தவ்பீக் மகன் சம்சுதீன் (36) என்பவரை கைது செய்தனர். இது குறித்து சம்சுதீனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!