18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழஅரசின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் கல்வி சீர் வழங்கினர்!..

தமிழஅரசின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் கல்வி சீர் வழங்கினர்!..

எழுதியவர்: ஆசிரியர் March 11, 2019, 2:31 pm

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது இந்த ஆரம்பப்பள்ளி தான் திண்டுக்கல் மாவட்டத்திலேயே மாணவர் சேர்க்கையில் முன் மாதிரியாக உள்ளது இதனால் துவக்கப்பள்ளில் 300க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பீரோ, டேபில், சேர், எழுதுபழகை, மின்விசிரி, போன்ற ஐம்பதாயிரம் ரூபாய் மதிபிற்கு மேற்பட்ட பள்ளிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள், பெற்றோர்கள், முன்னால் மாணவர்கள் சார்பாக கல்விச் சீர்கள் வழங்கப்பட்டது.

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், என ஏராலமான பொதுமக்கள் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு தேவையான எழுது பொருட்கள் முதல் குடி தண்ணீர் அண்டா வரை ஏராளமான பொருட்களை தாங்களாகவே முன்வந்து வழங்கினர.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!