17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய ஊட்டச்சத்து விழா..

தேசிய ஊட்டச்சத்து விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 11, 2019, 9:20 am

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் போஷான் அபியான் சார்பில் தேசிய ஊட்டச்சத்து திருவிழா, மகளிர் தின விழா நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கலா தலைமை வகித்தார், மேற்பார்வையாளர் உமா முன்னிலை வகித்தார். போஷான் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளர் மைதிலி ஏற்பாடு செய்தார்.

வட்டார திட்ட உதவியாளர் வெள்ளைப்பாண்டியன் போஷான் அபியான் திட்டம் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள், கிராம செவிலியர்கள், கிராம ஊராட்சி செயலாளர், பொதுமக்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்து கொண்டனர். கடலாடி, சாயல்குடி பகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மேற்பார்வையாளர்கள் சரசு, பால்மணி கலந்து கொண்டனர். அங்கன்வாடி பணியாளர் ராதா நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!