17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு புறம் சுற்றுப்புற சூழல் பிரச்சாரம்.. மறுபுறம் சூழல் மாசுபடும் வெடி வெடிக்கும் கலாச்சாரம்..

ஒரு புறம் சுற்றுப்புற சூழல் பிரச்சாரம்.. மறுபுறம் சூழல் மாசுபடும் வெடி வெடிக்கும் கலாச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் March 11, 2019, 2:40 am

இந்தியாவில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. ஒரு படி மேலே போய் மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு கூட வெடி வெடிக்க கால நிர்ணயம் செய்கிறது.

ஆனால் அரசியல் வருகைக்காகவும், தனி நபர் திருவிழாக்களுக்கும் வெடிகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது. உதாரணமாக அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் விழாக்களுக்காக பொதுமக்கள் அதிகமாக புழங்கும் பகுதிகள், மருத்துவமனை இருக்கும் பகுதிகள், வாகனங்கள் அதிகமாக செல்லும் நெடுஞ்சாலைகள் என வெடிக்கும் வெடிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

மக்கள் வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடும் திருவிழாக்களில் வெடி வெடிக்க கட்டுபாடு விதிக்கும் அரசாங்கம், இது போன்ற விசயங்களுக்கு தடை விதிக்குமா??

செய்தி:- வி.காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!