17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு… தேர்தல் திருவிழா தொடங்கியது..

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு… தேர்தல் திருவிழா தொடங்கியது..

எழுதியவர்: ஆசிரியர் March 11, 2019, 2:13 am

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18ம் தேதி இந்த இடைத்தேர்தல் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் கவுண்டவுன் தொடங்கி விட்டதால், தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்து இருக்கிறது. லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் 21 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. இதனால் தமிழகம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.இந்த 21 தொகுதி இடைதேர்தலால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க கூட வாய்ப்பு உள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ மறைவு காரணமாக இன்னும் 2 தொகுதிகள் காலியானது.

லோக்சபா தேர்தல், தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு! அதன்பின் ஓசூர் தொகுதி எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி சிறைத்தண்டனை பெற்றதால், அவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் தற்போது தமிழகத்தில் 21 தொகுதிகள் காலியாக இருக்கிறது. இந்த தொகுதிகளுக்குத் தான் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இதற்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதோடு சேர்த்து காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இந்த தேர்தலும் நடக்கும். ஏப்ரல் 18ம் தேதியில் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டும் சேர்ந்து நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!