17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் பாதை சார்பாக உலக மகளிர் தின விழா…

மக்கள் பாதை சார்பாக உலக மகளிர் தின விழா…

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2019, 9:46 pm

மக்கள் பாதை சார்பாக உலக மகளிர் தின விழா இன்று 10-03-2019 மாலை 4 மணி அளவில் இராமேஸ்வரம் ஓலைக்குடா சமுதாய நலக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இராமேஸ்வரம் நகர பொறுப்பாளர் அருளானந்து வரவேற்புரை ஆற்றி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்விற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமை ஏற்று நேர்மையாளர் சகாயம் அவர்களைப் பற்றியும் , நமது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் முன்னிலை வகித்து மக்கள் பாதையை பற்றியும் , சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் மிக தெளிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட நீரின்றி அமையாது உலகு திட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வீரக்குமார் கலந்து கொண்டு சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் தமிழக பெண்களின் பங்கு என்ன என்பதை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் இராமநாதபுரம் ஒன்றிய துணை பொறுப்பாளர் தினேஷ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மீனவ கூட்டுறவு மகளிர் பொறுப்பாளர் மரிய சொர்ணம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இராமேஸ்வரம் நகர துணை பொறுப்பாளர் அருளானந்து நன்றியுரை கூறினார்.

இந்த நிகழ்வை அருளானந்து , திருமுருகன் ஆகியோர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.இந்நிகழ்வில் சமூக பணியாற்றிய 5 பெண்களுக்கு மக்கள்பாதை சார்பாக பொன்னாடைகள் கொடுத்து கௌரவிக்கபட்டது. இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டர். இந்த அழகிய நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!