17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா..

நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2019, 9:35 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் நிலக்கோட்டை நூற்றாண்டு கண்ட இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் ஒன்றாகும். இக்கோயிலில் திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பவுர்ணமிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் நடைபெறுகிறது..

அதற்கான முதல் நிகழ்ச்சியாக நேற்று பகல் 12 மணி முதல் 3 மணி வரை இந்து நாடார் உறவின் முறை சார்பாக அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.. அதன் பின்னர் மாலை 6 மணிக்கு மாரியம்மன் நற்பணி மன்றம் சார்பாக அருள்மிகு மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பூச்சொரிதல் நிகழ்ச்சிக்காக நிலக்கோட்டை பகுதியில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பக்தர்களும் பொதுமக்களும் பூக்களை காணிக்கையாக அங்கிருந்த கோவில் நிர்வாகிகளிடம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து பூச்சொரிதல் விழாவிற்காக பெண்கள் கூடையில் பூக்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக நிலக்கோட்டை மெயின் பஜார் மற்றும் பெரிய காளியம்மன் கோவில் வழியாக ஊர்வலமாகச் சென்று இறுதியாக கோவிலை அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து பூக்களை அர்ச்சகரிடம் கொடுத்து மாரியம்மனுக்கு அந்தப் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் இதனைத் தொடர்ந்துகோட்டை, நிலக்கோட்டை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் திரண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிலக்கோட்டை நூற்றாண்டு கண்ட இந்து நாடார் உறவின்முறை காரியதரிசிகள் சுசீந்திரன், பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாபு ,கருமலை பாண்டியன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!