17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரயில் படியில் உறங்கியவர் தவறி விழுந்து படுகாயம்..

ரயில் படியில் உறங்கியவர் தவறி விழுந்து படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2019, 4:31 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே படியில் அமர்ந்து தூங்கிக்கொண்டு வந்தபோது ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சின்ராஜ்(22) என்ற அந்த இளைஞர், நாகர்கோவிலில் இருந்து கோயமுத்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த போது, கோவிலூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

உடனே அவருடன் வந்த நண்பர்கள், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து, சின்ராஜை மீட்டனர். இதனையடுத்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில், சின்ராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!