18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிய இரண்டு பெண்கள் கைது.

கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிய இரண்டு பெண்கள் கைது.

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2019, 4:24 pm


மதுரை மாநகர் S.S.காலனியை சேர்ந்த திரு.அப்துல் என்பவரது மனைவி திருமதி.சயிராபானு என்பவர் தனது குடும்ப தேவைக்காக எல்லீஸ்நகரை சேர்ந்த வெங்கடாஜலபதி மனைவி சித்ரா என்பவரிடம் ரூபாய்.35,000/- கடனாக பணம் வாங்கியதாகவும், பணத்தை உடனடியாக திரும்ப செலுத்த இயலாததால் அதிக வட்டி கேட்டு தன்னை 1) சித்ரா 49/19, க/பெ.வெங்கடாஜலபதி, நியூ எல்லீஸ் நகர், மதுரை, 2) உமா 27/19, க/பெ.பாக்கியராஜ், நியூஸ் எல்லீஸ் நகர், மதுரை துன்புறுத்துவதாக C3 S.S காலனி (ச.ஒ)காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் பெற்று சார்பு-ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் நேற்று (09.03.2019) கந்து வட்டி வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்ததில் இருவரும் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. எனவே இரண்டு நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!