17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பலி..

வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2019, 11:42 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் நாகப்பாண்டி (30). இவருக்கு திருமணம் முடிந்து 1பெண் குழந்தை உள்ள நிலையில் ஆட்டு வியபாரியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் செக்கணூரணியில் இருந்து ஆடுகளை வாங்கி தனது இருசக்கர வாகனத்தில் குப்பணம்பட்டிக்கு செல்லும் பொழுது தேனியில் இருந்து மதுரையை நோக்கி சென்ற கார் கருமாத்தூரில் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நாகபாண்டியை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பலியானவர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!